ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy : @BCCI 

தினத்தந்தி 24 Sept 2025 6:00 AM IST (Updated: 24 Sept 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த அணிகளும் சூப்பர் 4 சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்தன.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் தீவிரமாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story