ஆசிய கோப்பை: டி20 வடிவத்தில் அதிக ரன் குவித்த டாப் 10 வீரர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா..?


ஆசிய கோப்பை: டி20 வடிவத்தில் அதிக ரன் குவித்த டாப் 10 வீரர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா..?
x

ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவில் நடத்தப்படுவது இது 3-வது முறையாகும்.

சென்னை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. டி20 வடிவத்தில் இந்த தொடர் நடத்தப்படுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2016 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் டி20 வடிவில் நடைபெற்றுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்..!

1. விராட் கோலி - 429 ரன்கள்

2. முகமது ரிஸ்வான் - 281 ரன்கள்

3. ரோகித் சர்மா - 271 ரன்கள்

4. பாபர் ஹயாத் - 235 ரன்கள்

5. இப்ராஹிம் சத்ரன் - 196 ரன்கள்

6. ராஜபக்சா - 191 ரன்கள்

7. சபிர் ரஹ்மான் - 181 ரன்கள்

8. நஜிபுல்லா சத்ரன்/முகமது உஸ்மான் - 176 ரன்கள்

9. மக்முதுல்லா/பதும் நிசங்கா - 170 ரன்கள்

10. மெண்டிஸ் - 155 ரன்கள்

1 More update

Next Story