சி.எஸ்.கே அணியில் நீடிக்கும் தோனி - தக்கவைத்த வீரர்கள் அறிவிப்பு


Dhoni back in CSK squad - Retained players announced
x
தினத்தந்தி 31 Oct 2024 5:46 PM IST (Updated: 1 Nov 2024 6:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் இன்று (அக்.31-ந்தேதி) மாலைக்குள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீசா பத்திரானா என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியில் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தநிலையில், இந்த அறிவிப்பு அவர் சி.எஸ்.கே அணியில் நீடிப்பார் என்பதை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, மீண்டும் தோனி விளையாட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தொடர்ந்து, மற்ற அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களை அறிவித்துள்ளன.

1 More update

Next Story