உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..? விராட், சச்சினுக்கு எத்தனையாவது இடம்..?

image courtesy:PTI
இந்த பட்டியலில் பெரும்பாலும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர்.
சென்னை,
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பல வீரர்கள் பிரபலம் ஆகி உள்ளனர். கிரிக்கெட் என்பது விரும்பி விளையாடும் விளையாட்டாகவும், அதிகம் பின்பற்றப்படும் விளையாட்டாகவும் இருப்பதால், வீரர்கள் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், டி20 லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் வீரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்.
இந்நிலையில் உலகின் டாப்-9 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்..!
இதில் முதலிடத்தில் இருக்கும் இந்திய முன்னாள் வீரரான ஆர்யமான் பிர்லா கிரிக்கெட் உலகில் அதிகம் பிரபலம் இல்லாதவர். ரஞ்சி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இந்த பட்டியலில் பெரும்பாலும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர்.
1. ஆர்யமான் பிர்லா - சொத்து மதிப்பு தோராயமாக ரூ.70 ஆயிரம் கோடி.
2.சச்சின் - ரூ. 1,300 கோடி
3. விராட் கோலி - ரூ. 1,050 கோடி
4.மகேந்திரசிங் தோனி - ரூ. 1,000 கோடி
5.சவுரவ் கங்குலி - ரூ.634 கோடி
6. ரிக்கி பாண்டிங் - ரூ.580 கோடி
7. ஜாக் காலிஸ் - ரூ.580 கோடி
8. பிரையன் லாரா - ரூ. 500 கோடி
9. யுவராஜ் சிங் - ரூ.280 கோடி






