14 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்ற இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. கடந்த 2011 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
அதன்பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறவில்லை. தற்போது, 5 ஆயிரத்து 468 நாட்களுக்குப்பின் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த வெற்றியை இங்கிலாந்து ருசித்துள்ளது.






