ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: அபார பந்துவீச்சு.. இந்தியாவை வீழ்த்தி நேபாளம் அசத்தல்


ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: அபார பந்துவீச்சு.. இந்தியாவை வீழ்த்தி நேபாளம் அசத்தல்
x

image courtesy:twitter/@HongKongSixes

இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

ஹாங்காங்,

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நேற்று தொடங்கியது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டுள்ளது. குவைத் மற்றும் யுஏஇ அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஷித் கான் 55 ரன்கள் அடித்தார்.

பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 45 ரன்களில் ஆல் அவுட் ஆகி 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியா தரப்பில் பாரத் சிப்லி மற்றும் பிரியங்க் பஞ்சால் தலா 12 ரன்கள் அடித்தனர். நேபாளம் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், பாசிர் அகமது 2 விக்கெட்டுகளும், ரூபேஷ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

1 More update

Next Story