இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா..?


இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா..?
x

image courtesy:BCCI

தினத்தந்தி 19 Oct 2025 4:15 AM IST (Updated: 19 Oct 2025 4:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டி தொடருக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இதனால் ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழியலாம்.

இதனிடையே இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் பெர்த்தில் மழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story