ஐ.பி.எல் 2026: நடப்பு சாம்பியன் ஆர்சிபி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்

image courtesy:IPL
நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியை மீண்டும் தக்கவைத்துள்ளது.
பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், இன்று மாலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. விராட் கோலி, படிதார், குருனால் பாண்ட்யா, ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், பில் சால்ட் போன்ற நட்சத்திர வீரர்களை மீண்டும் தக்க வைத்துள்ளது.
ஆர்சிபி அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்:
விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட், படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, குருனால் பாண்ட்யா, ஜேக்கப் பெத்தேல், ஷெப்பர்டு, ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், ரஷிக்தார், சுயாஷ் சர்மா, நுவான் துஷாரா, அபிநந்தன் சிங், யாஷ் தயாள்.






