ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: @IPL
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை அணி 2 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. அதேவேளயில் 2 ஆட்டங்களில் ஆடியுள்ள ராஜஸ்தான் இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






