ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ்


ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு 189  ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ்
x

Image Courtesy: @IPL / @DelhiCapitals

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரெல் 49 ரன் எடுத்தார்

புதுடெல்லி,

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 31 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 32வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து டெல்லியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் பொரெல் மற்றும் பிரேசர் மெக்கர்க் களம் இறங்கினர். இதில் மெக்கர்க் 9 ரன்னிலும், அடுத்து வந்த கருண் நாயர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

தொடர்ந்து பொரெல் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ராகுல் 38 ரன்னிலும், பொரெல் 49 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து அக்சர் படேல் மற்றும் டிர்ஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் அக்சர் படேல் 14 பந்தில் 34 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரெல் 49 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆட உள்ளது.

1 More update

Next Story