ஐ.பி.எல்.: குஜராத் வீரருக்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?


ஐ.பி.எல்.: குஜராத் வீரருக்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?
x

Image Courtesy: @IPL

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 153 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

குஜராத் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முகமது சிராஜ் (4 ஓவரில் 17 ரன் கொடுத்து 4 விக்கெட்), பேட்டிங்கில் சுப்மன் கில் (61 ரன்) ஆகியோர் பெரிதும் உதவினர். இந்த ஆட்டத்தில் குஜராத் அணிக்காக களம் இறங்கிய இந்திய சீனியர் வீரரான இஷாந்த் சர்மா 4 ஓவரில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 53 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், எந்த குற்றத்திற்காக அபராதம் மற்றும் தகுதி இழப்பு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story