ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு மாற ஜடேஜா வைத்த ‘செக்’... வெளியான தகவல்


ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு மாற ஜடேஜா வைத்த ‘செக்’... வெளியான தகவல்
x

டிரேடிங் முறையில் ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற சென்னை அணி முடிவு செய்துள்ளது.

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இதில் முக்கியமான ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை பரிமாற்றம் முறையில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. அதற்கு ஈடாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் ஏறக்குறைய உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஜடேஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்சுக்கு சென்றால் அந்த அணியின் கேப்டன் பதவி காலியாக இருக்கும். இதனால் கேப்டன் பதவியை ஜடேஜா கேட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்ன முடிவெடுத்துள்ளது? என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.

1 More update

Next Story