ஐபிஎல்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி


ஐபிஎல்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 20 May 2025 11:08 PM IST (Updated: 21 May 2025 6:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. ராஜஸ்தான் அணி துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 10-வது தோல்வியாகும்.

1 More update

Next Story