ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்


ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின்  பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்
x
தினத்தந்தி 18 Oct 2025 4:30 AM IST (Updated: 18 Oct 2025 8:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா சென்றடைந்தது. பெர்த்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார்.

இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் ஷர்மா, , விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

1 More update

Next Story