முன்னாள் உலக சாம்பியனுக்கு இந்த நிலைமையா.... தரவரிசையில் 8வது இடத்தில் இங்கிலாந்து

மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது.
துபாய்,
ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . இதில் இங்கிலாந்து அணி 8வது இடத்துக்கு சரிந்துள்ளது
இந்தாண்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்று மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8வது இடத்துக்கு சரிந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 8வது இடத்தில் உள்ளதால் அந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் , நியூசிலாந்து 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story






