மந்தனா அபார சதம்... ஆஸ்திரேலியாவுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Image Courtesy: @BCCIWomen
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.
லக்னோ,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களம் கண்டனர்.
இதில் பிரதிகா ராவல் 25 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து மந்தனா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஹார்லீன் தியோல் 10 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 17 ரன், தீப்தி சர்மா 40 ரன், ரிச்சா ஹோஷ் 29 ரன், ராதா யாதவ் 6 ரன், அருந்ததி ரெட்டி 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய மந்தனா சதம் அடித்த நிலையில் 117 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 292 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.






