தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு
x

துணைத் தலைவராக எம். குமரேஷ் பொருளாளராக ஆர் ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார். இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

1 More update

Next Story