ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா அணியில் இளம் வீரர் சேர்ப்பு

Image Courtesy: @ICC
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான க்வேனா மபாகா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






