இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மேட் ஹென்றி காயம்.... மாற்று வீரர் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
Image Courtesy: @BLACKCAPS
Image Courtesy: @BLACKCAPS
Published on

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில், ஹாமில்டனில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது நியூசிலாந்து முன்னணி வீரரான மேட் ஹென்றி காயத்தை சந்தித்தார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக கிறிஸ்டியன் கிளார்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகாவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com