ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
Image Courtesy: @ProteasMenCSA
Image Courtesy: @ProteasMenCSA
Published on

கராச்சி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com