இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐ.சி.சி.யிடம் பாக்.வாரியம் புகார்.. என்ன நடந்தது..?


இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐ.சி.சி.யிடம் பாக்.வாரியம் புகார்.. என்ன நடந்தது..?
x

நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த வெற்றியை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அறிவித்தார். அவர் விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தது.

இதன் அடிப்படையில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் உடன் சென்றனர். ஐ.சி.சி.யின் விதிமுறைப்படி போட்டியின்போது வீரர்கள் அரசியல் பேசக்கூடாது என்பதால் அத்தகைய கருத்துகளை தவிர்க்கும்படி போட்டி நடுவர், சூர்யகுமாரை அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தில் அவருக்கு எச்சரிக்கையோ அல்லது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமோ விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

1 More update

Next Story