விமான விபத்து - கருப்பு பட்டை அணிந்து விளையாடும் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா வீரர்கள்


விமான விபத்து - கருப்பு பட்டை அணிந்து விளையாடும் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா வீரர்கள்
x

விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

லார்ட்ஸ்,

குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி மதியம் 1.39 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. 825 அடி உயரத்தை எட்டியபோது, அப்படியே கீழே தாழ்ந்து வந்து விமான நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி ஒன்றின் மீது விழுந்து வெடித்து சிதறியது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லண்டனை சேர்ந்த ஒருவர் மட்டும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், மருத்துவ விடுதியில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் , விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற விதமாக, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் . மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்

1 More update

Next Story