ஒரே டெஸ்ட்டில் 2 சதங்கள் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ; சாதனை படைத்த பண்ட்


ஒரே டெஸ்ட்டில் 2 சதங்கள் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ; சாதனை படைத்த பண்ட்
x

இங்கிலாந்து, இந்தியா இடையேயான டெஸ்ட் லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது

லீட்ஸ்,

இங்கிலாந்து, இந்தியா இடையேயான டெஸ்ட் லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 465 ரன்களுக்கு அவுட் ஆனது. இதையடுத்து, இந்தியா 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட்டில் இந்தியாவின் ரிஷப் பண்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 134 ரன்கள் விளாசினார். 2வது இன்னிங்சிலும் பண்ட் 118 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் ஒரே டெஸ்ட்டில் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக இந்த பட்டியலில் ஜிம்பாவே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அண்டி பிளவர் முதல் இடத்தில் உள்ளார். 2001ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் பிளவர் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 142 ரன்களும், 2வது இன்னிங்சில் 199 ரன்களும் (நாட் அவுட்) விளாசினார். தற்போது பிளவரின் சாதனையை ரிஷப் பண்ட் சமன்படுத்தியுள்ளார்.

1 More update

Next Story