மீண்டும் களத்திற்கு திரும்பிய ரிஷப் பண்ட்

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளார்
பெங்களூரு,
இந்தியா ஏ- தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் இன்று தொடங்கியது .
காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளார். அதன்படி ரிஷப் பண்ட் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Related Tags :
Next Story






