நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணை வெளியீடு

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி பிப்., 14-ம் தேதி தொடங்குகிறது.
மும்பை,
ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் 5 அணிகள் பங்கேற்கும் நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி பிப்., 14-ம் தேதி தொடங்குகிறது.
2025 ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 15ம் தேதி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான முழு விபரம்:-
Related Tags :
Next Story






