ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
x

Image Courtesy: @ICC

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிகள் கொழும்புவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்ணாண்டோ, நுவானிடு பெர்ணாண்டோ, குசல் மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, காமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, அசிதா பெர்ணாண்டோ, முகமது ஷிராஸ், ஈசன் மலிங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே. .

1 More update

Next Story