அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்: மும்பை மக்களுக்கு ரோகித் சர்மா வேண்டுகோள்

இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது. குறிப்பாக, கடந்த 8 மணிநேரத்தில் மட்டும் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் மும்பை நகரில் இல்லாத மழை அளவாகும். இடைவிடாத மழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தாதர் நகரம், கிங் சர்க்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளநீரில் பலமணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தபடியே இருக்கும் சூழல் உள்ளது. அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரெயில், விமான சேவைகளும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பை மக்கள் அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என என பதிவிட்டுள்ளார்.






