டி20 கிரிக்கெட்: ரசல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா

நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
டி20 கிரிக்கெட்: ரசல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா
Published on

நாக்பூர்,

மும்பை,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ரிங்கு சிங் 44 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவன் கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், ராபின்சன் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ரவீந்திரா 1 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மார்க் 39 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், லீக் மற்றும் உள்ளூர் போட்டி சேர்த்து) இதுவரை 169 ஆட்டங்களில் ஆடி 5,002 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் 2,898 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் குறைந்த பந்தில் 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஆந்த்ரே ரசலிடம் இருந்து (2,942 பந்தில்) தட்டிப் பறித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com