வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு


வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு
x

Image Courtesy: @BCBtigers

தினத்தந்தி 24 Oct 2025 10:45 AM IST (Updated: 24 Oct 2025 10:45 AM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.

டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணி விவரம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாசி நூருல் ஹசன் சோஹன், ஷாக் மெஹதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்.

1 More update

Next Story