டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் - கனடா அணிகள் இன்று மோதல்


டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் - கனடா அணிகள் இன்று மோதல்
x

Image :Pakistan Cricket/Cricket Canada

தினத்தந்தி 11 Jun 2024 10:27 AM GMT (Updated: 11 Jun 2024 11:55 AM GMT)

22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

நியூயார்க்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது. முதலில் பாகிஸ்தான் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். இன்னொரு பக்கம் அமெரிக்கா தனது கடைசி இரு லீக்கில் (இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக) தோற்க வேண்டும். இவ்வாறு நடந்து ரன்ரேட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 கதவு திறக்கும்.

சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை சாதாரணமாக எடுத்து விட முடியாது. அமெரிக்காவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்து தோல்வி அடைந்த கனடா, அயர்லாந்துக்கு எதிராக 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. எனவே பாகிஸ்தானுக்கு கடும் சோதனை அளிக்க கனடா வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.


Next Story
  • chat