சென்னையில் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் ?

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் விரைவில் தொடங்க உள்ளன.
சென்னை,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடருக்கு அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் விரைவில் தொடங்க உள்ளன.இந்த நிலையில் , டி20 உலக கோப்பைக்கான 4 பயிற்சி ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2ம் தேதி கனடா - இத்தாலி, 3ம் தேதி நேபாளம் - ஐக்கிய அமீரக அணி , 5ம் தேதி நேபாள் - கனடா, 6ம் தேதி இத்தாலி - ஐக்கிய அமீரக அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன .
Related Tags :
Next Story






