டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனையில் சச்சினை முந்தி 2-வது இடம் பிடித்த சுப்மன் கில்


டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனையில் சச்சினை முந்தி 2-வது இடம் பிடித்த சுப்மன் கில்
x

image courtesy:BCCI

தினத்தந்தி 4 July 2025 3:45 PM IST (Updated: 4 July 2025 3:54 PM IST)
t-max-icont-min-icon

இந்த சாதனை பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்தில் உள்ளார்.

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் தற்போதைய வயது 25 ஆண்டு 298 நாட்கள். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் (26 ஆண்டு 189 நாட்கள்) 2-வது இடத்தில் இருந்தார்.

அந்த பட்டியல்:

1. மன்சூர் அலிகான் பட்டோடி - 23 ஆண்டு 39 நாட்கள்

2. சுப்மன் கில் - 25 ஆண்டு 298 நாட்கள்

3. சச்சின் - 26 ஆண்டு 189 நாட்கள்

4. விராட் கோலி - 27 ஆண்டு 260 நாட்கள்

1 More update

Next Story