ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்... வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்... வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
x

image courtesy: @windiescricket / X (Twitter) / File Image 

தினத்தந்தி 11 Jun 2025 5:45 PM IST (Updated: 11 Jun 2025 5:46 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்ததும், வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ரோஸ்டன் சேஸ் கேப்டனாகவும், ஜோமல் வாரிக்கன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் ஷாய் ஹோப், பிரண்டன் கிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன் (துணை கேப்டன்), கெவ்லான் ஆண்டர்சன், கிரெய்க் பிராத்வைட், ஜான் கேம்பல், கீசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாச், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், ஜோஹன் லேன், மிகைல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.



1 More update

Next Story