வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு தாமதம்


வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு தாமதம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 Sept 2025 3:30 AM IST (Updated: 25 Sept 2025 3:30 AM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

துபாய்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று மாலை அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதையொட்டி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் ஆலோசித்தார்.

ஆனாலும் அணி பட்டியல் வெளியிடப்படவில்லை. சில நடைமுறை சிக்கல் காரணமாக ஒரு நாள் தாமதமாக தேர்வு குழு தலைவர் அகர்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து அணி விவரத்தை வெளியிட இருப்பதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 More update

Next Story