வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர்கள் விலகல்

image courtesy:ICC
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
வெலிங்டன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி வருகிற 10-ம் தேதி வெலிங்டனில் தொடங்க உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 18-ம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர் மற்றும் நாதன் ஸ்மித் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். அத்துடன் 2-வது போட்டியிலிருந்து விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெலும் விலகியுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக கிறிஸ்டியன் கிளார்க், மைக்கேல் ரே மற்றும் மிட்ச் ஹே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி விவரம்: டாம் லதம் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மிட்ச் ஹே, டேரில் மிட்செல், மைக்கேல் ரே, ரச்சின் ரவீந்திர, பிளேர் டிக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்.






