இது மிகவும் வித்தியாசமான பிட்ச் - ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் பேட்டி


இது மிகவும் வித்தியாசமான பிட்ச் - ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் பேட்டி
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 14 Oct 2025 8:00 PM IST (Updated: 14 Oct 2025 8:01 PM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி புதுடெல்லியில் நடந்தது. அந்த போட்டி இன்று முடிந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் போட்டியை விட இது மிகவும் வித்தியாசமான பிட்ச். இங்கே நிறைய ஓவர்களை வீசுவது சவாலானது. அங்கே நான் மகிழ்ச்சியுடன் பந்து வீசினேன். இயற்கையாக அங்கே ட்ரிப்ட் இல்லை. பிட்ச் அதிகமாக காய்ந்திருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறைய ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டுகள் எடுப்பதை நான் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்.

நீங்கள் நிறைய சுழலை போடும் போது இயற்கையாக ட்ரிப்ட் கிடைக்கும். பேட்ஸ்மேன்கள் போல்ட்டாவதை நீங்கள் விரும்புவீர்கள். இப்போட்டியைப் போல முதல் போட்டியில் சில விக்கெட்டுகள் எடுத்ததை நான் விரும்பினேன். இங்கிருந்து சென்று நாங்கள் அடுத்தத் தொடருக்கு தயாராகும். ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து பந்து வீசுவது மகிழ்ச்சியானது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story