டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சு தேர்வு
x

மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்துள்ளது. இதுவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இரண்டு முறை சாம்பியனான கோவை கிங்ஸ் வெளியேறி விட்டது. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன. முன்னதாக இன்று நடைபெற்ற சேப்பாக் - மதுரை இடையிலான முதல் ஆட்டத்தில் சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அதே மைதானத்தில் நடக்கும் 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இதனிடையே மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story