டாம் லதாம், கான்வே சதம்.. முதல் நாளில் நியூசிலாந்து 334 ரன்கள் குவிப்பு

image courtesy:ICC
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
மவுண்ட் மவுங்கானுய்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 1-0 (முதல் போட்டி டிரா) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம் - டேவான் கான்வே களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 323 ரன்கள் குவித்த நிலையில் பிரிந்தது. கேப்டன் டாம் லதாம் 137 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜேக்கப் டபி களமிறங்கினார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 90 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 334 ரன்கள் குவித்துள்ளது. கான்வே 178 ரன்களுடனும், டபி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






