முத்தரப்பு டி20 தொடர்: விலகிய ஆப்கானிஸ்தான்.. புதிய அணியை சேர்த்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லாகூர்,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 தொடர் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ராவல்பிண்டி, லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான், முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் அதற்கு பதிலாக ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை அடுத்த மாதம் 17-ந்தேதி எதிர்கொள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com