எனக்கும் - வாகனுக்கும் இடையே டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை... இணையத்தை கலக்கும் வாசிம் ஜாபரின் பதிவு


எனக்கும் - வாகனுக்கும் இடையே டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை... இணையத்தை கலக்கும் வாசிம் ஜாபரின் பதிவு
x
தினத்தந்தி 8 Aug 2025 6:07 PM IST (Updated: 8 Aug 2025 6:10 PM IST)
t-max-icont-min-icon

வாசிம் ஜாபர் - மைக்கேல் வாகன் இருவரும் சமூக வலைதளங்களில் ஜாலியாக மோதிக்கொள்வது வழக்கம்.

மும்பை,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கணித்திருந்தார். அவரை இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் 4-வது போட்டியின் முடிவில் வம்பிழுத்து பதிலடி கொடுத்தார். இருவரும் வழக்கமாகவே சமூக வலைதளங்களில் மாறி மாறி ஒருவரை ஒருவர் வம்பிழுப்பது உண்டு.

அந்த சூழலில் லண்டன் ஓவலில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் வாசிம் ஜாபர் - மைக்கேல் வாகன் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கலாய்த்து பதிவிட்டனர். இதனை ரசிகர்கள் உக்ரைன் - ரஷியா மற்றும் இந்தியா - பாகிஸ்தான் போருடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்தனர்.

இதனை கண்ட வாசிம் ஜாபர், “எனக்கும் மைக்கேல் வாகனுக்கும் இடையில் டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. சமூக ஊடகப் போர் தொடரும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று பதிவிட்டார். இது இணையத்தை கலக்கி வருகிறது.

1 More update

Next Story