இந்திய உள்ளூர் தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா

image courtesy: PTI
விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களது மாநில அணிகளுக்காக விளையாட உள்ளனர்.
முன்னதாக இருவரும் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர். இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆடுவதை இலக்காக கொண்டுள்ளனர். அதுவரை இருவரும் தொடர்ந்து பார்மில் இருக்க உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர்.
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார்.
டெல்லி அணி விவரம்: ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி (துணை கேப்டன்), விராட் கோலி, யாஷ் துல், சர்தக் ரஞ்சன், பிரியன்ஷ் ஆர்யா, தேஜஸ்வி சிங், நிதிஷ் ராணா, ஹிருத்திக் ஷோக்கீன், ஹர்ஷ் தியாகி, சிமர்ஜீத் சிங், பிரின்ஸ் யாதவ், திவிஜ் மெஹ்ரா, ஆயுஷ் தோசேஜா, வைபவ் காந்த்பால், ரோஹன் ராணா, இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி.
மறுபுறம் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் முதல் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது.
மும்பை அணி விவரம்: ஷர்துல் தாகூர் (கேப்டன்), ரோகித் சர்மா (முதல் 2 போட்டிகள் மட்டும்), இஷான் முல்சந்தனி, முஷீர் கான், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சர்பராஸ் கான், சித்தேஷ் லாட், சின்மய் சுதர், ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தாமோர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, ஓன்கர் தர்மாலே, சில்வஸ்டர் டி'சோசா, சாய்ராஜ் படில், சுர்யான்ஷ் ஷெட்ஜ்.






