நேபாளத்துக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு


நேபாளத்துக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
x

image courtesy:ICC

நேபாளம் - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெற உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 27-ம் தேதியும், 2-வது போட்டி 29-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 30-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அகீல் ஹொசைன் தலைமையிலான அந்த அணியில் ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

அகீல் ஹொசைன் (கேப்டன்), பேபியன் ஆலன், ஜூவல் ஆண்ட்ரூ, அக்கீம் அகஸ்டே, நவின் பிடைஸ், ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, கரிமா கோர், ஜேசன் ஹோல்டர்,அமீர் ஜாங்கூ, கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ஜிஷன் மோட்டாரா, ரமோன் சிம்மண்ட்ஸ், ஷமர் ஸ்பிரிங்கர்

1 More update

Next Story