நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

image courtesy:ICC
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
ஜமைக்கா,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது. இது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான அந்த அணியில் கெமர் ரோச், ஷாய் ஹோப், ஜோமல் வாரிக்கன், ஜஸ்டின் கிரீவ்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:
ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், ஷாய் ஹோப், டெவின் இம்லாச், பிரண்டன் கிங், ஜோஹன் லேன், ஆண்டர்சன் பிலிப், கெமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஓஜே ஷீல்ட்ஸ்.






