விராட் கோலியின் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டது ஏன்..? சுப்மன் கில் விளக்கம்


விராட் கோலியின் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டது ஏன்..? சுப்மன் கில் விளக்கம்
x

image courtesy:PTI

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி நம்பர் 4 இடத்தில் களமிறங்கினார்.

லீட்ஸ்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இரு நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளதால் போதிய அனுபவமில்லாத ஒரு அணியாக இந்தியா அங்கு சென்றுள்ளது. 25 வயதான சுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

விராட் கோலி ஓய்வை அறிவித்ததில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த 4-வது இடத்தில் விளையாடப்போகும் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது. அதோடு அந்த இடத்தில் விளையாட தகுதியான வீரர் யார்? என்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

அந்த சூழலில் விராட் கோலி பேட் செய்த 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில் கால்பதிக்கிறார். இந்நிலையில் விராட் கோலி விளையாடிய 4-வது இடத்தில் களமிறங்க ஒப்புக்கொண்டது ஏன்? என்று சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பின்னர் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் நானும் ஒரு பெரிய ஆலோசனையில் ஈடுபட்டோம். அப்போது அணியின் பயிற்சியாளரான கம்பீர் என்னை 4-வது இடத்தில் விளையாட வைக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினேன் என்பதனாலே விராட் கோலியின் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டேன்" என்று கூறினார்.

1 More update

Next Story