பெண்கள் டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி


பெண்கள் டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
x
தினத்தந்தி 5 Oct 2024 6:56 PM IST (Updated: 5 Oct 2024 7:49 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஷார்ஜா,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிலாக்ஷி சில்வா 29 ரன்களும் ஹர்ஷிதா 23 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மேகன் ஸ்கட் 3 விக்கெட், மொலினஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடர்ந்து 94 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரலிய அணி அதிரடியாக விளையாடி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அந்த அணியில் பெத் மூனே 43 ரன்கள் குவித்தார் .

1 More update

Next Story