மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்தை 168 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா பிளிம்மர் 43 ரன்கள் அடித்தார்.
விசாகப்பட்டினம்,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று விசாகப்பட்டினத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஜார்ஜியா பிளிம்மர் (43 ரன்கள்), அமெலியா கெர் (35 ரன்கள்), சோபி டிவைன் (23 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
38.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லின்சே ஸ்மித் 3 விக்கெட்டுகளும், நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அலைஸ் கேப்சி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கி உள்ளது.






