ஆசிய கோப்பை ஆக்கி: போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்


ஆசிய கோப்பை ஆக்கி: போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்
x

ஆசிய கோப்பை ஆக்கி போட்டி செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.

பாட்னா,

இந்தியா, சீனா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆக்கி இந்தியா நேற்று அறிவித்துள்ளது. ரசிகர்கள் www.ticketgenie.in என்ற இணைய தளம் அல்லது ஆக்கி இந்தியா செயலியில் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து இலவச டிக்கெட்டை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story