ஆசிய கோப்பை போட்டி: இந்திய மகளிர் ஆக்கி அணி அறிவிப்பு


ஆசிய கோப்பை போட்டி: இந்திய மகளிர் ஆக்கி அணி அறிவிப்பு
x

image courtey:PTI

சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

புதுடெல்லி,

8 அணிகள் இடையிலான 11-வது ஆசிய கோப்பை மகளிர் ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் நடப்பு சாம்பியன் ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 23 வயது நடுகள வீராங்கனை சலிமா டெடி கேப்டனாக தொடருகிறார். சமீபத்தில் நடந்த புரோ லீக்கின் ஐரோப்பிய சுற்றில் இடம் பிடித்து இருந்த அனுபவம் வாய்ந்த சவிதா, சுஷிலா சானு ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆசிய போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: பன்சாரி சோலங்கி, பிச்சுதேவி கரிபாம்.

பின்களம்: மனிஷா சவுகான், உதிதா, ஜோதி, சுமன் தேவி தோவ்டம், நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி.

நடுகளம்: நேஹா, வைஷ்ணவி விட்டல் பால்கே, சலிமா டெடி (கேப்டன்), ஷர்மிளா தேவி, லால்ரெம்சியாமி, சுனிலிதா டாப்போ.

முன்களம்: நவ்னீத் கவுர், ருதஜா தாதாசோ பிசல், பியூட்டி டங்டங், மும்தாஜ் கான், தீபிகா, சங்கீதா குமாரி.

1 More update

Next Story