ஆக்கி இந்தியா லீக்: டெல்லி அணியை வீழ்த்தி கலிங்கா லான்சர்ஸ் வெற்றி


ஆக்கி இந்தியா லீக்: டெல்லி அணியை வீழ்த்தி கலிங்கா லான்சர்ஸ் வெற்றி
x

image courtesy: twitter/@HockeyIndiaLeag

இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் சமனில் முடிந்தது.

ரூர்கேலா,

6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ்- டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 5-5 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்ட. இதில் வேதாந்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பாபி சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story