ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி


ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு  தகுதி
x

18 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

ரூர்கேலா,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து முடிவை அறிய ஆட்டம் ஷூட்-அவுட்டுக்கு சென்றது. இதில் உ.பி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்சை தோற்கடித்தது. இருப்பினும் டிராகன்ஸ் அணி சமனுக்குரிய ஒரு புள்ளியை பெற்று மொத்தம் 18 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டங்களில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ்- தமிழ்நாடு டிராகன்ஸ் (மாலை 6 மணி), சூர்மா ஆக்கி கிளப்- ஐதராபாத் டூபான்ஸ் (இரவு 8.15 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story